IND vs WI : இன்றைய 2 ஆவது போட்டியில் டாஸ் ஜெயிச்சா கண்டிப்பா கேப்டன் பாண்டியா – இந்த முடிவை தான் எடுப்பாரு

Pandya
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது இந்த டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது பின்தங்கியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய இந்திய அணி முனைப்புடன் காத்திருக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் ஒருவேளை இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா டாசில் வெற்றி பெற்றால் கட்டாயம் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது.]

ஏனெனில் எப்பொழுதுமே டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை செட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர் பாண்டியா. அதோடு மட்டுமின்றி முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி இதே கயானா மைதானத்தில் 150 ரன்கள் இலக்காக வைத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தியிருந்தது.

- Advertisement -

இந்த மைதானம் இரண்டாம் பாதியில் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுத்ததால் எப்போதுமே முதலில் பேட்டிங் செய்ய விரும்பும் பாண்டியா ராசில் வெற்றி பெற்றால் கட்டாயம் பேட்டிங்கை தான் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் வீரர்களின் திறனை பரிசோதிக்கவும் அவர் இந்த முடிவை தைரியமாக எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2023 உ.கோ செமி ஃபைனலில் விளையாடப் போகும் 4 அணிகள் இவை தான் – இயன் மோர்கன், க்ளன் மெக்ராத் கணிப்பு

அதே போன்று சேசிங்கில் எப்பொழுதுமே சிறப்பாக செயல்படும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து எவ்வாறு விளையாடுகிறது என்பதை பரிசோதிக்கவும் கேப்டன் பாண்டியா அதிக ஆர்வம் காட்டுவார் என்பதால் இந்த போட்டியிலும் நிச்சயம் டாஸ் என்றால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யப்போவது உறுதி.

Advertisement