இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க டெஸ்ட் அணியில் இணைய இருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர் – ஓகே சொல்வாரா?

Jasprit Bumrah Team India
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு சென்றும் இந்தியா இப்படி சொதப்பியுள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

IND

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் வேளையில் பின் வரிசையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாததும் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

Pandya

ஜூலை 12-ஆம் தேதி துவங்கும் இந்த டெஸ்ட் தொடரானது 24-ஆம் தேதி வரை இந்த நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவை பிசிசிஐ டெஸ்ட் அணிக்கு அழைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக ஹார்டிக் பாண்டியா விளையாடியிருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது முழு உடற்தகுதியுடன் ஒயிட்பால் கிரிக்கெட்டில் அசத்தலாக விளையாடி வரும் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அழைக்க உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : ஐசிசி தொடரில் இந்தியா தொடர்ந்து தோற்க ராசியில்லாத நீங்க தான் காரணம் – கலாய்த்த ரசிகர், ஆகாஷ் சோப்ரா பதிலடி

இருப்பினும் இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வாரா? அதற்கு ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா அளித்திருந்த ஒரு பேட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அளவிற்கு நான் இன்னும் தகுதியாகவில்லை என்றும், ஒருவேளை நான் பிட்டாக இருப்பதாக தோன்றினால் அது குறித்து யோசிப்பேன் என்றும் பாண்டியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement