ஒருபுறம் விவாதம் காரசராமா இருந்தாலும்.. பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்டிக் பாண்டியா மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டாவது முறையாக குஜராத் அணியை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2022-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கடந்த ஆண்டு சென்னை அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

அதனை தொடர்ந்து இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலத்திற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து கேப்டன் ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டனாக நியமித்து ரோகித் சர்மாவை சாதாரண வீரராக விளையாடுமாறு கேட்டுக் கொண்டது.

- Advertisement -

ஒருபுறம் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது சரியான முடிவாக மும்பை அணி நிர்வாகத்தால் கூறப்பட்டது. மறுபுறம் மும்பை அணியின் ரசிகர்கள் சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை எப்படி ஹார்டிக் பாண்டியாவின் கீழ் விளையாட வைக்க முடியும் என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

அதேபோன்று ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மாற்றியதால் அதிருப்தி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் சிலரும் மறைமுகமாக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். எது எப்படி இருந்தாலும் நடப்பு ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா தான் செயல்படுவார் என்று ஏற்கனவே அணி நிர்வாகம் அறிவித்துவிட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்த சீசனுக்காக மும்பை அணி தயாராகி வரும் வேளையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அதிகாரப்பூர்வமாக கேப்டன் ஹார்டிக் பாண்டியா இணைந்துள்ளார். அதிலும் குறிப்பாக பயிற்சிக்கு முன்னதாக வீரர்களின் ஓய்வருக்கு சென்ற ஹர்திக் பாண்டியா : சுவாமி படத்தை வைத்து பூஜை செய்துவிட்டு பூஜைக்கு பின்னர் தேங்காய் உடைத்து பயிற்சியில் இணைந்துள்ளார். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 600 ரன்ஸ் அடிப்போம்ன்னு ஆண்டர்சன் சொன்னப்போவே புரிஞ்சு போச்சு.. ரூட் ஒத்துக்கிட்டது ஆர்ச்சர்யம்.. பஸ்பால் பற்றி அஸ்வின்

இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ஹார்டிக் பாண்டியா பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த மும்பை அணியை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என்பதை பொறுத்தே எதிர்வரும் காலங்களில் அவர் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு இருப்பதால் இந்த தொடர் அவருக்கும் முக்கியமான தொடராக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement