இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று மார்க் 8-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய இந்த இறுதி போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐசிசி டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் என்னுடைய இலக்கு இதுதான் : ஹார்டிக் பாண்டியா
இவ்வேளையில் இந்த மாபெரும் இறுதி போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் இந்த வெற்றி குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவும் நெகிழ்ச்சியான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைப்பதே கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.
அதற்காக எவ்வளவு கோப்பைகளை நான் இந்திய அணிக்காக வெல்ல முடியுமோ அவ்வளவு கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன். குறிப்பாக கடந்த 2024 டி20 உலக கோப்பை தொடரின் வெற்றிக்குப் பின்னர் நான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடி வருகிறேன். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல. என்னுடைய நம்பிக்கையும் இதில் இருக்கிறது. அதற்காக நான் கடினமாக உழைத்து வருகிறேன்.
ஒவ்வொரு போட்டியிலுமே என்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறேன். இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. எங்களது அணிக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் என்னுடைய கரியரில் 10 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. என்னுடைய பாதி கரியர் முடிந்து விட்டது. ஆனால் மீதி பாதி கரியர் இன்னும் இருக்கிறது. எனவே குறைந்தது பத்து கோப்பைகளையாவது நான் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : முதல் 2 பால் சிங்கிள் எடுத்ததே லாஸ்ட் ஓவரில் அந்த சம்பவத்தை செய்யத்தான் – ஷிவம் துபே பேட்டி
ஐசிசி மற்றும் ஐபிஎல் என இரண்டிலும் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக ஐ.சி.சி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இதுவரை மூன்று ஐசிசி கோப்பைகளை நான் வென்றுள்ளேன். எனவே இனிவரும் அடுத்த பத்து ஆண்டுகளில் 5 முதல் 6 ஐ.சி.சி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



