
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த தொடர் முடிந்து இந்திய அணியின் ஓய்வறையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களிடையே உரையாற்றி இருந்தார். அப்போது எப்போதுமே வெற்றிக்காக போராடினால் நிச்சயம் இப்படித்தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் இதே போல் தொடர்ந்து அனைத்து தொடர்களிலும் வெற்றிக்காக போராட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்படி கம்பீர் கூறுகையில் : சில வீரர்கள் ஒருநாள் தொடரில் ஆடப்போவதில்லை. அவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கும். வங்கதேச தொடருக்கு அவர்கள் திரும்ப வரும்போது நிச்சயம் அவர்களது திறமை மற்றும் உடற்தகுதி உச்சத்தில் இருக்க வேண்டும். அந்த தொடருக்கு நேரடியாக வந்து நாம் சிறப்பாக செயல்படலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். தொடர்ந்து உங்களது பயிற்சியையும் உடற்தகுதியையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனை அடுத்து கம்பீர் சூரியகுமார் யாதவை அழைக்காமல் ஹார்டிக் பாண்டியாவை உரையாற்றுமாறு வீரர்களின் மத்தியில் அழைத்தார். அப்போது வந்த ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :கம்பீர் பாய் சொல்வது போல அனைவரும் ஒன்றிணைந்து விளையாடியதால் வெற்றி பெற்றிருக்கிறோம்.
நான் எப்போதுமே கீழ் வரிசையில் உள்ள வீரர்களும் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன். அதற்கு ஏற்றார் போல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் இந்த போட்டியில் ரன்களை சேர்த்து மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : பயிற்சி ஃபோட்டோவில் சிக்கிய ரோஹித்.. ஆதாரத்துடன் ரசிகர்கள் கலாய்த்து தள்ளியதால்.. டெலிட் செய்த பரிதாபம்
அதேபோன்று சூரியகுமார் யாதவ் கடைசி இரண்டு ஓவர்களை வீசுவதற்கு எடுத்த முடிவு யாருமே எதிர்பாராத விதமாக எடுத்த சிறப்பான முடிவு. மேலும் கம்பீர் பாய் சொல்வது போல் அனைவரும் ஒன்றிணைந்து விளையாடுவதும், உடற்தகுதியும் நமக்கு அவசியம் என்று ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.