நடராஜன் மீது உள்ள அன்பினை வார்த்தையால் மட்டும் சொல்லாமல் செயலால் நிரூபித்து காட்டிய பாண்டியா – நெகிழ்வைத்த தருணம்

Nattu-3
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்ததால் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வழக்கம்போல நடராஜன் இந்த போட்டியிலும் தனது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். மேலும் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்திய அணி தொடரை கைப்பற்றியதும் இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

Nattu-1

- Advertisement -

ஆனால் இந்த மூன்று போட்டிகளிலுமே தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ஹார்டிக் பாண்டியாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே 2வது டி20 போட்டி முடிந்தவுடன் ஆட்டநாயகன் விருது பெற்ற ஹார்திக் பாண்டியா நான் இந்த போட்டியில் நன்றாக விளையாடி இருந்தாலும் என்னை பொறுத்தவரை ஆட்டநாயகன் நடராஜன் தான் அவர் இந்த விருதுக்கு தகுந்தவர் என தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் இன்று தொடர் நாயகன் விருதை வென்ற அவர் நடராஜனை வெகுவாக பாராட்டி பேசி இருந்தார். அதுமட்டுமின்றி தான் கையில் வாங்கிய அந்தத் தொடர் நாயகன் கோப்பையை நேராக வந்து நடராஜனிடம் கொடுத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். மைதானத்தில் சிறிது நேரம் நடராஜன் உடன் அங்கும் இங்கும் உலாவிய அவர் தன்னுடைய மகிழ்ச்சியை நடராஜன் பகிர்ந்து கொண்டு செல்போனில் சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

pandya

பாண்டியாவின் இந்த செயல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வார்த்தையால் மட்டும் நடராஜனை பிடிக்கும் என்று பாண்டியா கூறியது அல்லாமல் தற்போது அவர் பெற்ற இந்த தொடர்நாயகன் விருதையும் நடராஜனுக்கு கொடுத்து அழகு பார்த்த தருணம் உண்மையிலேயே பாண்டியா கிரேட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

INDvsAUS

மேலும் இந்திய அணி வீரர்கள் தொடரின் வெற்றியை கொண்டாடிய போதும் நடராஜன் தொடருக்கான கோப்பையையும், ஹர்டிக் பாண்டியாவின் தொடர் நாயகன் கோப்பையையும் கையில் ஏந்தியவாறு நடுவாக அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இந்த தொடரே நடராஜனுக்கு முதல் தொடர் என்பதால் கோப்பையை அவரிடம் கொடுத்து கோலி வெற்றியை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement