விவாகரத்து வாங்கி பிரிந்தாலும் மனைவிக்கும், மகனுக்கும் விலையுயர்ந்த பரிசை அளித்த – ஹார்டிக் பாண்டியா

Hardik Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக விளையாடவில்லை என்றாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். அதிலும் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார்.

முன்னாள் மனைவிக்கு விலையுயர்ந்த பரிசளித்த : ஹார்டிக் பாண்டியா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு மாடல் அழகியான நடாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்டியாவுக்கு அகஸ்தியா என்கிற மகனும் இருக்கிறார். ஆனாலும் அவர்களது திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்டாஷா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபட காரணமாக அவர் முறைப்படி விவாகரத்தும் பெற்று பிரிந்தார். அதன்பின்னர் ஹார்திக் பாண்டியா கிரிக்கெட்டில் கவனம் செலுத்த நட்டாஷா தனது மகனை வளர்த்து வருகிறார். இருந்தாலும் மகனுக்காக அவ்வப்போது நேரத்தை ஒதுக்கும் பாண்டியா தனது முன்னாள் மனைவியுடனும் நட்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் முறைப்படி விவாகரத்து பெற்று நட்டாஷாவிடம் இருந்து பிரிந்தாலும் ஹார்டிக் பாண்டியா அவ்வப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முன்னாள் மனைவியான நட்டாஷாவிற்கும் அவரது மகன் அகஸ்தியா பாண்டியாவிற்கும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுரொம்ப கடினமான முடிவுதான்.. இருந்தாலும் இதுதான் எங்க டீம்.. டாசுக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் பேச்சு

அதனை அவரது மனைவியும் மகனும் ஒன்றாக சேர்ந்து அந்த ஷோ ரூமுக்கு சென்று பெற்றுக்கொண்டனர். அதுகுறித்த புகைப்படம் வெளியாகிய அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மனைவியை விட்டு பிரிந்தாலும் ஹார்டிக் பாண்டியாவின் இந்த செயல் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement