இதுரொம்ப கடினமான முடிவுதான்.. இருந்தாலும் இதுதான் எங்க டீம்.. டாசுக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் பேச்சு

SKY Toss
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை : சூரியகுமார் யாதவ்

அதன் காரணமாக தற்போது இந்திய அணியானது முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் எதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என சூரியகுமார் யாதவ் அறிவித்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது துணை கேப்டனான அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அக்ஸர் பட்டேல் உள்ளே வராமல் வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து விளையாடுவார் என்று கேப்டன் உறுதி செய்தார்.

அந்த வகையில் டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது : உண்மையிலேயே நாங்கள் இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஆனால் முதலில் பந்து வீசுவதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த போட்டியிலும் எங்களால் வெற்றியை நோக்கி நகர முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மாதிரி இஷான் கிஷனும் இந்த ஷாட்டை ரொம்ப ஈஸியா ஆடுறாரு – இர்பான் பதான் பாராட்டு

அதேபோன்று இந்த போட்டியில் இது சற்று கடினமான முடிவுதான் இருந்தாலும் அக்சர் பட்டேல் இந்த போட்டியில் விளையாடவில்லை. கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் இந்த போட்டிக்கும் செல்கிறோம். இது அணியின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான். இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement