ஐ.பி.எல் பிக்சிங் உண்மைதானா? ஹார்டிக் பாண்டியா பெற்ற விலையுயர்ந்த – பரிசால் வெடித்த சர்ச்சை

Pandya
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மே மாதம் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக இந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட குஜராத் முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதல் முறையாக இந்த சீசனில் விளையாடி கோப்பையை வென்றதால் அந்த அணிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வரும் அதேவேளையில் அந்த அணி குறித்த சர்ச்சைகளும் அதிக அளவில் இருந்து வருகின்றன.

Pandya

ஏனெனில் பிசிசிஐ-யின் செயலாளரான ஜெய் ஷா குஜராத்தை சேர்ந்தவர் என்பதனால் குஜராத் அணியை வெற்றிபெற வைக்க திட்டமிட்டு பிக்சிங் செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இறுதிப்போட்டியில் வென்றதாகவும் பல்வேறு கருத்துக்கள் சமூகவலைதளத்தில் உலா வருகின்றன.

- Advertisement -

அதே போன்று குஜராத் அணி ஜெயிக்கும் போட்டிகளில் எல்லாம் ஜெய்ஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்த சில வீடியோக்களும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிக்ஸிங் நடந்திருப்பதாகவும் போட்ட ட்வீட்டுகள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது ஹார்திக் பாண்டியா வெளியிட்டுள்ள தனது இன்ஸ்டாகிராம் பதிவில் : முற்றிலுமாக வைரக்கற்களால் பதிக்கப்பட்ட குஜராத் அணியின் லோகோ அமைந்த ஒரு டைமன்ட் செயினை பாண்டியா அணிந்திருக்கிறார்.

pandya 1

அந்த விலையுயர்ந்த பரிசானது குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் பிசிசிஐயின் விதிமுறைப்படி வீரர்கள் யாரும் பி.சி.சி.ஐ-யின் அனுமதி இல்லாமல் வெளியிலிருந்து வரும் எந்த பரிசுகளையும் வாங்க கூடாது.

- Advertisement -

அப்படி வாங்கினால் முன்கூட்டியே இது குறித்து பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பிசிசிஐக்கு தெரியாமலோ அல்லது மறைமுகமாகவோ இதேபோன்று பரிசுகளை பெற்றுக் கொண்டால் அது மேட்ச் பிக்ஸ்சிங்கிற்கு ஈடான ஒன்றாகவே கருதப்படும். அதன்காரணமாக தற்போது பாண்டியா பெற்ற இந்த செயின் விவகாரம் மேட்ச் பிக்சிங் உடன் ஒப்பிடப்பட்டு உண்மையில் ஐபிஎல் தொடரில் பிக்ஸிங் நடைபெற்றதா என்ற கேள்வியை எழுப்பும் விடயமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : குழந்தை மாதிரி நடந்துக்கோனு சொன்னாங்க – நியாயத்தை சொன்ன சீனியர் வீரர்கள் மீது அலுத்துக்கொள்ளும் இளம் வீரர்

இந்த செயின் விவகாரம் குறித்து பாண்டியா பிசிசிஐ-க்கு தெரிவித்தாரா அல்லது இது தெரியாமல் நடந்த ஒன்றா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பாண்டியா பரிசாக பெற்ற இந்த செயின் மீண்டும் ஐ.பி.எல் விவகாரத்தில் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement