
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 124 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அதுதவிர்த்து கடந்து 2015-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 152 போட்டிகளில் விளையாடி உள்ளதோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கபில் தேவுக்கு அடுத்து மிகப்பெரிய இடத்தை பிடித்த அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடவில்லை என்றாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதன்மை வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். அதே வேளையில் தேவையான போது அவருக்கு ஓய்வினை வழங்கியும் இந்திய அணி அவரை முறையாக பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ள அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக துவங்கியுள்ள முதலாவது டி20 போட்டிகள் பங்கேற்ற ஹார்டிக் பாண்டியா சர்வதேச டி20 போட்டிகளில் முன்னாள் வீரர் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார்.
அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 124 போட்டிகளில் விளையாடியிருந்த வேளையில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்றதன் மூலம் தனது 125-ஆவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இதன்மூலம் ஏற்கனவே இந்திய அணி சார்பாக அதிக டி20 போட்டிகளில் பங்கேற்ற வீரராக ரோஹித் சர்மா 159 போட்டியுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து விராட் கோலி 125 போட்டிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : 4 ஆவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – சூரியகுமார் யாதவ்
இந்நிலையில் இன்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஹார்டிக் பாண்டியாவும்125 போட்டியில் விளையாடி இந்திய அணிக்காக அதிக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் சமன் செய்துள்ளார். அடுத்த போட்டியிலேயே விராட் கோலியை பின்னுக்கு தள்ளி அவர் இரண்டாவது இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.