எனக்கு பிடித்த இடதுகை ஆட்டக்காரர் இவர்தான். ஐ.சி.சி யின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த – ஹார்டிக் பாண்டியா

Pandya

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சகோதரர்களாக பாண்டிய சகோதரர்களான ஹர்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக ஹார்டிக் பாண்டியா ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஜொலித்து வருகிறார்.

krunal

அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தாலும் தற்போது ஒருநாள் போட்டியில் விளையாட தகுதி ஆகிவிட்டார் என்று ஏற்கனவே லக்ஷ்மணன் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று உலக இடது கை ஆட்டக்காரர்கள் தினம் என்பதனால் ஐசிசி ஒரு அறிக்கையினை வெளியிட்டு இருந்தது.

அந்த பதிவில் கங்குலி, சங்ககாரா, லாரா, குக், வாசிம் அக்ரம், ஜாஹீர்கான், சாகிப் அல் ஹசன், கில்க்ரிஸ்ட் போன்ற இடது கை ஆட்டக்காரர்களின் புகைப்படத்தை பதிவிட்டு இதில் உங்களுக்கு பிடித்த இடதுகை ஆட்டக்காரர் யார் என்ற கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்த ஹர்டிக் பாண்டியா வித்தியாசமான முறையில் ஐசிசியின் பதிவிற்கு பதிலினை தெரிவித்தார்.

இந்த போட்டோக்கள் அனைத்திலிருந்தும் ஒன்றை தேர்ந்தெடுக்காமல் அவர் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த நபர் தான் எனக்கு பிடித்த இடதுகை ஆட்டக்காரர் என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் அதிகஅளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -