தாக்கூர் செட்டாக மாட்டாரு.. பாண்டியா மட்டும் இதை செஞ்சா இந்தியாவை அசைக்க முடியாது.. ஹனுமா விஹாரி

Hanuma Vihari 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்டிக் பாண்டியாவால் அசத்த முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் விமர்சித்தார். அப்போது 2018 நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த பாண்டியா அதற்கு பதிலடி கொடுத்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார்.

ஆனால் அதுவே அவர் இந்தியாவுக்காக விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும். அதன் பின் 2018 ஆசிய கோப்பை சந்தித்த படுகாயத்தால் 2023 உலகக் கோப்பை வரை பாண்டியா அடிக்கடி இடையிடையே காயத்தை சந்தித்து வருகிறார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை முழுவதுமாக புறக்கணித்துள்ள அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

பாண்டியா கம்பேக் நிகழுமா:

அந்த வாய்ப்பில் 2024 டி20 உலகக் கோப்பையில் அசத்திய அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இந்நிலையில் ரஞ்சிக் கோப்பையின் வழியாக ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான பயிற்சிகளை எடுக்கும் வீடியோக்கள் சமீபத்தில் டுவிட்டரில் வைரலானது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடினால் 2024 – 25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியாவை அசைக்க முடியாது என ஹனுமா விகாரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை அவர் விரும்பினால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி. அவரைப் போன்றவர் விளையாடுவது ஆஸ்திரேலியாவின் பெர்த் அல்லது அடிலெய்ட் மைதானங்களில் நடைபெற உள்ள பிங்க் போட்டிகளில் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சு ஆப்ஷனை கொடுத்து இந்தியாவை பலமடைய வைக்கும்”

- Advertisement -

பாண்டியாவால் பலம்:

எனவே டெஸ்டில் கம்பேக் கொடுக்க விரும்புகிறாரா இல்லையா என்பது பாண்டியாவை பொறுத்தது. ஒருவேளை விரும்பினால் அவர் சில ரஞ்சிக் கோப்பையில் போட்டியில் விளையாட வேண்டும். ஏனெனில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் போது அதிக பளு ஏற்படும். சர்துள் தாக்கூரை ஏற்கனவே நாம் சோதித்தோம். ஆனால் கடந்த துலீப் கோப்பையில் அவருடைய செயல்பாடுகளும் புள்ளிவிவரங்களும் நன்றாக இல்லை”

இதையும் படிங்க: முதல் நாள் மட்டுமல்ல.. இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்த சிக்கல் இருக்குமாம் – வெளியான வானிலை அறிக்கை

“இருப்பினும் இந்திய அணியின் கலவையில் அவர் இருக்கக்கூடும். ஆனால் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுக்க விரும்பினால் அவர் தான் நம்முடைய நம்பர் ஒன் தேர்வாக இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல தற்சமயத்தில் இந்திய அணியில் க்ரீன், மிட்சேல் மார்ஷ்க்கு நிகராக பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை என்பது மட்டுமே குறையாகும்.

Advertisement