IND vs NZ : என்னடா இது? இரண்டாவது டி20 போட்டிக்கான டீமில் தேவையில்லாத மாற்றத்தை செய்த – ஹார்டிக் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக 2 ஆவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் ,மத்தியில் எகிறியுள்ளது.

IND-vs-NZ

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 29-ஆம் தேதி இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன் காரணமாக தற்போது நியூசிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணிக்குள் கொண்டுவரப்படுவார் என்று தெரிந்தது.

Umran Malik

ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் வேறு ஒரு மாற்றத்தை இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்துள்ளார். அந்த வகையில் உம்ரான் மாலிக்கை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலை பாண்டியா அணிக்குள் கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

இந்த மாற்றம் அவசியம் தானா? உம்ரான் மாலிக்கை வெளியேற்றியது ஏன்? என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நீங்க இப்படி பண்ணா ரசிகர்களும் ரோஹித்தை பத்தி தப்பா தான் நெனைப்பாங்க – அஷ்வின் வெளிப்படை

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) ராகுல் திரிபாதி, 4) சூரியகுமார் யாதவ், 5)ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) ஷிவம் மாவி, 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement