IND vs WI : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனை படைத்த பாண்டியா – ஜேக் காலிஸ் மாதிரி வர விரும்புவதாக ஆசை

Hardik Pandya
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து 73 (50) ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 11* (5) ரன்கள் எடுத்திருந்தபோது காயமடைந்து ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

IND vs WI

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் – சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அதில் ஒருபுறம் மெதுவாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 76 (44) ரன்களை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்து பினிசிங் கொடுத்ததால் 19 ஓவரில் 165/3 ரன்களை எடுத்த இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் முதல் 2 போட்டிகளில் சமனில் இருந்த இத்தொடரில் 2 – 1* (5) என்ற கணக்கில் மீண்டும் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் அனைத்து இந்திய வீரர்களும் தங்களால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு பங்காற்றிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு 57 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த ஓபனிங் ஜோடியில் பிரண்டன் கிங்கை 20 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்தியாவுக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

Hardik Pandya 1

தனித்துவமான சாதனை:
அது இந்தியாவுக்காக அவர் எடுத்த 50-வது விக்கெட்டாகும். அதன் வாயிலாக சஹால், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்குப் பின் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் எடுத்த 6-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்ற அவர் ஏற்கனவே பேட்டிங்கில் 806* ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 500 ரன்களையும் 50 விக்கெட்களையும் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான ஆல்-ரவுண்டர் சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

உலக அளவில் சாகிப் அல் ஹசன், ஷாஹித் அப்ரிடி, ஜார்ஜ் டோக்ரெல், முகமது நபி, முகமது ஹபீஸ், ட்வயன் ப்ராவோ, கெவின் ஓப்ராய்ன், திசாரா பெரேரா ஆகியோருக்குப் பின் இந்த சாதனையை படைக்கும் 9-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த 2016இல் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களில் 3 வகையான இந்திய அணியிலும் அசத்திய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுத்தினார்.

Hardik Pandya 2

காலிஸ் மாதிரி:
இருப்பினும் 2019 உலக கோப்பைக்கு பின்பு ஏற்பட்ட காயத்தால் பந்து வீச முடியாமல் பேட்டிங்கிலும் தடுமாறிய அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் அதற்காக மனம் தளராமல் ஐபிஎல் 2022 தொடரில் அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டு கோப்பையை வென்று கம்பேக் கொடுத்த அவர் சமீபத்திய தொடர்களில் மீண்டும் பழைய பாண்டியாவாக அசத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அசத்திய அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான வரலாற்று சாதனை படைத்தார். இப்படி அடுத்தடுத்த சாதனைகளை படைத்து வரும் அவரை நேற்றைய போட்டி முடிந்த பின் நீங்கள் இந்தியாவின் முதல் ஹர்திக் பாண்டியாவாக உருவாகியுள்ளதாக உணர்கிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.

Hardik-Pandya

“இதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனது பெயர் எப்போதும் ஹர்திக் பாண்டியா தான். எப்போதுமே என்னுடைய சிறந்தவற்றை அணிக்காக கொடுக்க நினைக்கிறேன். அந்த வகையில் இந்தியாவின் ஆல்-ரவுண்டராக உருவாகியுள்ளேன் என்று கருதுகிறேன்”

இதையும் படிங்க: IND vs WI : இப்படி ஒரு ரன் மெஷின் பவுலரை பார்த்ததே இல்ல – மோசமான சாதனை படைத்த இந்திய பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள்

“மேலும் பெரிய சாதனைகளைக் கனவு கண்டால் தான் சாதனை படைக்க முடியும். அந்த வகையில் ஜாக் காலிஸ் போல் வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அவர் செய்த சாதனைகள் அபாரமானது. அதை இந்தியாவுக்காக செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement