
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியதற்கு பிறகு தற்போது பெரிய இடைவெளிக்கு பின்னர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். எப்போதுமே தனது உடை மற்றும் ஆபரணங்கள் என வித்தியாசம் காட்டும் ஹார்டிக் பாண்டியா இம்முறை ஆசிய கோப்பை தொடருக்காக வெள்ளை நிற முடியுடன் புதிய லுக்கில் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார்.
அதுமட்டும் இன்றி தற்போது எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்காக தீவிர பயிற்சினை மேற்கொண்டு வரும் ஹார்டிக் பாண்டியா தனது கையில் ஒரு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றினை அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வாட்ச் இந்திய மதிப்பின்படி எவ்வளவு விலை வரும்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் கட்டிருக்கும் இந்த வாட்சின் விலையை கேட்டால் தலை சுற்றும் அளவிற்கு நிச்சயம் உங்களுக்கு தோன்றலாம். ஏனெனில் ஹார்டிக் பாண்டியா ஆசிய கோப்பை தொடருக்காக அணிந்திருக்கும் வாட்சின் பெயர் ரிச்சர்ட் மில்லி ஆர்.எம் 27-04 நான்கு வகையான இந்த வாட்ச் உலகிலேயே 50 நபர்களிடம் மட்டுமே உள்ளது.
பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் இந்த வாட்ச்சை வைத்துள்ளார். அவருக்கு அடுத்து கிரிக்கெட் வீரர்களில் ஹார்டிக் பாண்டியா மட்டுமே இந்த வகையான வாட்சினை வாங்கியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியா எப்போதுமே விலையுயர்ந்த வாட்ச்களை சேகரிப்பதில் அதிக ஆர்வமுடையவர்.
அந்த வகையில் அவர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக வாங்கியுள்ள இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி. ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டம் வெல்பவர்களின் ஒட்டுமொத்த பரிசு தொகையே முதலிடம் பிடிபவர்களுக்கு 2 கோடியே 60 லட்சம் தான்.
இதையும் படிங்க : 1975 – 1980 சினிமாக்களில் அமிதாப் செஞ்சதை.. நிஜத்தில் விராட் கோலி இந்தியாவுக்காக செஞ்சாரு.. சஞ்சய் பங்கர்
அதேபோன்று இந்த தொடரில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1 கோடியே 30 லட்சம் மட்டுமே பரிசு தொகையாக கிடைக்கும். இப்படி ஆசிய கோப்பை தொடரின் பரிசு மதிப்பை விட 10 மடங்கு அதிக விலையுயர்ந்த வாட்சை ஹார்டிக் பாண்டியா கட்டியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.