- Advertisement -
ஐ.பி.எல்

அண்ணன் தம்பிக்கு இடையே நீடிக்கும் மனக்கசப்பு.. ஆர்.சி.பி வெற்றிக்கு பிறகு – தெரிந்த உண்மை

இந்தியாவில் நடைபெற்று வந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது சீசனானது நேற்றுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அண்ணன் தம்பிக்கு இடையே நீடிக்கும் மனக்கசப்பு :

ஏற்கனவே 2025 ஐ.பி.எல் தொடரினை வென்று நடப்பு சாம்பியனாக விளையாடிய ஆர்.சி.பி அணி மீண்டும் 2026 ஐ.பி.எல் கோப்பையை வென்று தங்களது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. இதன்மூலம் அடுத்தடுத்த இரண்டு கோப்பைகளை ஆர்.சி.பி அணி கைப்பற்றவே அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் திலைக்கின்றனர். இந்த போட்டி முடிந்ததும் ஆர்.சி.பி அணியின் வீரர்களும் மிகப் பெரியளவில் இந்த வெற்றியினை கொண்டாடியிருந்தார்கள்.

- Advertisement -

அவர்களது இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு பலரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக செயல்பட்ட க்ருனால் பாண்டியாவை பலரும் பாராட்டி வரும் வேளையில் அவர் கோப்பையை வென்ற பிறகும் கூட இதுவரை அவரது தம்பியான ஹார்டிக் பாண்டியா அவருக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை என்றும் மனக்கசப்பு இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இவ்வேளையில் 2026 ஐ.பி.எல் கோப்பை க்ருனால் பாண்டியா வென்றும் அவரை ஹார்டிக் பாண்டியா பாராட்டாமல் இருப்பது அவர்களுக்கு இடையே உள்ள மனக்கசப்பை உறுதிப்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி மற்றும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்த ரஜத் பட்டிதார் – விவரம் இதோ

அதோடு இந்த விடயம் குறித்து பேட்டியளித்த க்ருனால் பாண்டியாவும் : “கேன், அண்டர்டேக்கர் கூட சில சமயங்களில் சண்டையிடுவார்கள்” என்று ஒரு பதிலை அளித்துவிட்டு நகர்ந்துவிட்டார். இதன் காரணமாக அவர்கள் இருவருக்குள் ஒரு சிறிய சண்டை இருக்கிறது என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -