வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 297-6 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 164-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 3 ரவி பிஸ்னோய் விக்கெட்டுகளை எடுத்தார்.
தொடர்நாயகன் பாண்டியா:
அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை ஒய்ட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு 118 ரன்கள் ஒரு விக்கெட் மற்றும் ஐந்து கேட்ச்கள் பிடித்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் ஆகியோர் இந்திய அணிக்கு அற்புதமான சுதந்திரம் கொடுப்பதே இந்த அதிரடி ஆட்டத்திற்கு காரணம் என்று பாண்டியா கூறியுள்ளார்.
அத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாலே ஒரு வீரரால் அதிகப்படியான செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இந்த அணிக்கும் கொடுக்கும் சுதந்திரம் அற்புதமானது. நாளின் இறுதியில் நீங்கள் விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினால் உங்களிடமிருந்து உங்களால் அதிகப்படியான செயல்பாடுகளை கொண்டு வர முடியும்”
மகிழ்ச்சியா இருந்தா:
“அணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் வெற்றியை கொண்டாடும் போது நீங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவது போல் உணர முடியும். தற்போது என்னுடைய உடல் நன்றாக இருக்கிறது. மீண்டும் வந்து விளையாடுவதற்கு எனக்கு கடவுள் எப்போதும் உதவி செய்கிறார். மோசமான நாளாக இருந்தாலும் நல்ல நாளாக இருந்தாலும் நான் எனது செயல்முறைகளை மாற்றவில்லை”
இதையும் படிங்க: இப்படி விளையாடுனா எப்படி ஜெயிக்க முடியும்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – வங்கதேச கேப்டன் வருத்தம்
“கவர்ஸ் திசையின் மேல் அடித்த சிக்ஸர் எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது” என்று கூறினார். அந்த வகையில் கேப்டன்ஷிப் பதவி கிடைக்காவிட்டாலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். மொத்தத்தில் இத்தொடரில் சவால் விட்ட வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.



