காலி மைதானமாக இருந்தாலும் சரி நான் ஐ.பி.எல் தொடரில் விளையாட தயாராக இருக்கேன் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சி.எஸ்.கே வீரர்

csk
- Advertisement -

கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து இந்த தொடர் நடக்குமா ? இல்லை மீண்டும் தள்ளி வைக்கப்படுமா ? அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படுமா என்ற நிலைக்கு ஐ.பி.எல் தொடர் வந்துள்ளது.

CskvsMi

- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் தொடரும் அந்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு கரோனா வைரசின் தாக்கம் குறையுமா என்பது கேள்விக்குறிதான்?

அடுத்த சில மாதங்களுக்கு ஐபிஎல் தொடரை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது போலிருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த தொடர் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Harbhajan

ரசிகர்கள்தான் மைதானத்திற்கு வருவது முக்கியம் ஆனால், அவர்கள் இல்லாமல் ஆடும் நிலை வந்தால் கூட நான் தயாராக இருக்கிறேன். அதனை பொருட்படுத்தாமல் நாம் ஆடலாம். ஒரு வீரராக ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் விளையாடினால் பரபரப்பு இருக்காது. ஆனால், ரசிகர்கள் அதனை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பார்கள்.

- Advertisement -

இதற்கு பாதுகாப்பு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். போட்டி நடக்கும் மைதானம், வீரர்கள் தங்கும் இடம், ஹோட்டல்கள், பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகள் என அனைத்திற்கும் மிக அதிநவீன பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். உயிர் சம்பந்தமான விஷயம் என்பதால் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் ஐபிஎல் தொடரை நடத்துவது தான் சரியாக இருக்கும்.

Harbhajan

ஐபிஎல் போட்டிகளை நாங்கள் பலரும் தவறவிடுகிறோம். இறுதிப்போட்டி உட்பட 17 போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். மைதானம், ரசிகர்கள், அசத்தலான வரவேற்பு, வீரர்கள் பயணிக்கும் பேருந்து, அவர்களுடன் பைக்கில் வரும் ரசிகர்கள் என இதுபோன்ற அம்சமான விஷயங்களை தவறவிடுகிறோம். விரைவில் ஐபிஎல் தொடர் நடக்கும் என நம்புகிறேன் இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன்சிங்.

Advertisement