சென்னை வந்திறங்கியதும் தல் தளபதியை வைத்து தமிழில் ட்வீட் செய்து அசத்திய ஹர்பஜன் – வைரலாகும் பதிவு

Harbhajan
- Advertisement -

இந்த வருடம் பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் வரும் 29ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்றவருடம் கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களான தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, கர்ண் ஷர்மா மற்றும் தீபக் சாகர் போன்ற பலரும் சென்னை வந்து 1 ஆம் தேதி முதல் பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங்கும் சென்னை வந்தடைந்தார். நேற்று கோயம்புத்தூர் ஏர்போர்ட் இல் தனது பேட்டை காணவில்லை என்று பரபரப்பை ஏற்படுத்திய ஹர்பஜன் இன்று பயிற்சியில் ஈடுபட்டார்.

மேலும் சிஎஸ்கே அணி குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. வீரர்கள் மட்டுமின்றி சி.எஸ்.கே அணி நிர்வாகமும் அவ்வப்போது பதிவுகளை இட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தனது பங்கிற்கு ஹர்பஜன் சிங் ஒரு ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : “வந்து இறங்கி இருக்கும் இடம் சென்னை இது நம்ம டீம் செம வலிமை மாப்பி தளபதி ஸ்டைல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்ல போறான்னு தெரியல அண்ணா தேடிப்பார்த்து ஆட முடியுமா கேள்வி செய்கை வேற ராகமா இருக்கப் போது நம் தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Harbhajan

இந்த பதிவில் அஜித் விஜய் ரஜினி கமல் ஆகிய அனைத்து நடிகர்களின் படம் மற்றும் டயலாக் ஆகியவற்றை சேர்த்து ட்வீட் செய்து தெறிக்கவிட்டுள்ளார் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடிக்கடி தமிழில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.மேலும் தற்போது அர்ஜுன் மாற்று காமெடி நடிகர் சதீஷ் ஆகியோருடன் இணைந்து தமிழ் படம் ஒன்றிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement