இரண்டு மாசத்துக்கு ஒரே தமாசு தான். தமிழில் ட்வீட் செய்து வீடியோவை வெளியிட்ட – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன. இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

கடந்த ஆண்டு சென்னை அணியில் இணைந்த ஹர்பஜன்சிங் இந்த ஆண்டும் சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். தமிழில் ஆர்வம் மிகுந்த ஹர்பஜன்சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து அசத்துவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்த ஹர்பஜன் சிங் தொடர்ந்து சென்னை அணி சம்பந்தமான விளம்பரப் படங்களில் நடித்தும் வருகிறார். அதுபோன்று தோனி, ஜாதவ், முரளி விஜய் ஆகியோருடன் ஹர்பஜன் இணைந்து நடித்த ஒரு வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் இன்னும் இரண்டு மாதத்திற்கு ஒரே கூத்தும் கும்மாளமும் தான் ஆட்டம் இன்னும் வந்துட்டா பாப்பிங்க நாங்க யாருன்னு அப்படி ட்வீட் செய்துள்ளார்.இதோ அந்த ட்வீட் :

இவரது இந்த ட்விட் சென்னை ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மாதம் முழுவதும் இதுபோன்ற தமிழ் ட்வீட்களை ஹர்பஜன் சிங்கிடம் அடிக்கடி எதிர்பார்க்கலாம்.

Advertisement