சி.எஸ்.கே அணி அவசரத்தால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது – மனம்திறந்த ஹர்பஜன்

Harbhajan

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது ஆண்டு கடந்த ஆண்டுதான். இதனால் இந்த 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிகள் பல முக்கிய மாற்றங்களை எடுக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி பல புதிய வீரர்களை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படாத 6 வீரர்களையும் அந்த அணி வெளியேற்றியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விக்கு காரணம் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் விலகியதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக குடும்பத்துடன் இருக்கவே பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு விளையாடவில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று நினைத்து சிஎஸ்கே அணியும் அவரை அணியில் இருந்து விடுவித்தது.

ஆனால் தற்போது மீண்டும் ஹர்பஜன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஹர்பஜன் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஐபிஎல் தொடரில் நான் இந்த வருடம் ஆடுவதற்கு முனைப்பாக இருக்கிறேன். அதற்காக கடுமையாக பயிற்சியும் செய்து வருகிறேன். கடந்த வருடம் கூட நான் பயிற்சியை மேற்கொண்டேன்.

Harbhajan

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக என்னால் அங்கு சென்று விளையாட முடியவில்லை நான் என் குடும்பத்தோடு இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் சிஎஸ்கே அணியுடன் இணைய முடியவில்லை. ஆனால் இந்த வருடம் நான் விளையாடும் முனைப்போடு இருக்கிறேன். எனக்கு வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஐபிஎல் நான் கண்டிப்பாக கலக்குவேன் என்று எதிர்பார்க்கிறேன் என ஹர்பஜன் கூறினார்.

- Advertisement -

Harbhajan

மேலும் சிஎஸ்கே அணி என்னை அவசரப்பட்டு ரிலீஸ் செய்து விட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் இனிமேல் விளையாட மாட்டேன் என்று கருதி அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக 2021 ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று ஹர்பஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ள ஹர்பஜன் அவரின் அடிப்படை விலையாக இரண்டு கோடியை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.