இவரைப்போன்ற மோசமான பயிற்சியாளரை நான் பார்த்ததே இல்லை – முன்னாள் பயிற்சியாளரை கழுவி ஊற்றிய ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

கடந்த 2005 முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் சாப்பல். இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட உடன் சீனியர் வீரர்கள் பலருடன் இவருக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டது . இதன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் இவர் காலத்தில் அனைவரிடமும் இவர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி கொண்டார். இவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் கங்குலியின் கேப்டன் பதவியும் பறிபோனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chappell 1

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனது காலகட்டத்தில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா, தோனி உள்ளிட்ட வீரர்கள் குறித்து பேசியுள்ளார் கிரேக் சேப்பல். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியை நான் முதன் முதலாக பார்த்த போது பெரிதாக எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் முதலில் அவர் பேட்டிங் செய்தபோது நான் பிரமிப்படைந்தேன்.

அவர் ஆடும் அதிரடியான ஆட்டத்தால் என்னை கட்டிப் போட்டுவிட்டார். நிச்சயமாக இந்தியாவின் மிகச்சிறந்த ஒரு பேட்ஸ்மேனாக வருவார் என்று நினைத்தேன். மேலும் பந்தை மிகவும் சாதாரணமாக அடிப்பார். நான் பார்த்ததிலேயே மிகவும் பவர்ஃபுல்லான இந்திய பேட்ஸ்மேன் இவர்தான். இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 183 ரன்கள் என்னை பிரமிப்படைய வைத்தது. அந்த நேரத்தில் தோனியை சிக்சர் அடிப்பதற்கு பதிலாக பந்தய தரையோடு தரையாக உருட்டுங்கள் என்று அறிவுரை கூறினேன் என்று கூறினார் கிரேக் சேப்பல்.

இதனை பார்த்து கடுப்பான ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாவது : தோனி அனைவரது பந்தையும் சிக்சர் அடித்து வெளியே பறக்க விட்டுக்கொண்டிருந்தார். ஆனால் கிரேக் சாப்பல் செய்ததோ, அவரை தரையில் அடித்து ஆடுமாறு கூறினார். அவர் விளையாடியது வித்தியாசமான ஆட்டம் இந்தியாவை தோல்வியடைய வைக்கவே இப்படி செய்திருப்பார் போலிருக்கிறது என்பது போன்ற கண்ணோட்டத்தில் நகைச்சுவையாக டுவிட் செய்திருந்தார் ஹர்பஜன்சிங்.

- Advertisement -

அதே நேரத்தில் யுவராஜ் சிங்கும் சேப்பல் என்னிடமும் வந்து கடைசி 10 ஓவர்களில் தரையோடு தரையாக அடித்து ஆடுங்கள் என்று கூறினார் என ட்வீட் செய்துள்ளார். இவ்வாறு தங்களுக்கு பிடிக்காத பயிற்சியாளரிடம் யுவராஜ் சிங் ,தோனி, ஹர்பஜன் சிங்,சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சேவாக், கௌதம் கம்பீர் என பலரும் விளையாடியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Yuvi 3

அவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. மேலும், இந்தியாவின் மோசமான பயிற்சியாளர் என்றும் இவர் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கிரேக் சாப்பலின் பயிற்சி காலத்தில் விளையாடிய இந்திய அணி குறித்து உங்களுக்கு ஏதேனும் சம்பவம் நினைவில் இருந்தால் அதனை கமெண்ட் செக்ஸனில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement