CSK vs MI : கடைசி ஓவரில் என்னை தோனி இதற்காகத்தான் களமிறக்கவில்லை – ஹர்பஜன் விளக்கம்

மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி நூலிழையில் தவறிவிட்டது இதனால் ஐ.பி.எல் தொடரை இழந்தது

Harbhajan

மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி நூலிழையில் தவறிவிட்டது இதனால் ஐ.பி.எல் தொடரை இழந்தது சென்னை அணி. மும்பை அணி 4 ஆவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

malinga 1

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வாட்சன் 80 ரன்கள் அடித்து இறுதிவரை தனியாக போராடினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு 2 பந்து 4 ரன்கள் தேவை அப்போது வாட்சன் ரன் ஆகி வெளியேறியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி ஹர்பஜன் சிங் இருக்கையில் தாகூரை களமிறக்கினார் தோனி.

இதன் காரணத்தை தற்போது ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் நான் இறங்குவதற்கு முன்னால் தாகூரை தோனி களம் இறங்க கேட்டுக்கொண்டார். அதன் காரணம் முதல் தர போட்டியில் சில சதங்களை தாக்கூர் அடித்துள்ளார் ஆகவே அவரால் களத்திற்கு சென்றவுடன் ஒரு பவுண்டரி அடிக்க முடியும் என்று நினைத்து அவரை ககளமிறக்கினார்.

Harbhajan

ஆனால் எதிர்பாராத விதமாக சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.தாகூருக்கு முன் ஹர்பஜனை களமிறக்கி இருக்க வேண்டும் என்று சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.