எனது வாழ்வில் நான் சந்தித்த மோசமான தொடர் என்றால் அது இதுதான். பாண்டிங் அம்பயர் போல நடந்துகொண்டார் – ஹர்பஜன் குற்றச்சாட்டு

Harbhajan
- Advertisement -

கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் நடைபெறவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரும், இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரில் தற்போது வரை எந்தவொரு இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

Harbhajan

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தில் முன்னணி வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவது, சக வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதே போன்று இணையத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஓய்வு நேரத்தில் 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அந்த தொடரில் ஹர்பஜன் சிங்கும் சைமண்ட்ஸ் ஆகியோர் மோதிக்கொண்டது அப்போது வைரலாகியது. மேலும் அவர்கள் படுமோசமாக களத்தில் சண்டையிட்டுக் கொண்டனர்.

Harbhajan 2

அம்பயர்கள் செய்த தவறுகளால் இந்திய அணிக்கு அந்த தொடர் முழுவதும் பாதகமாக அமைந்தது. இந்நிலையில் அதுகுறித்து நினைவுகளைப் பகிர்ந்த ஹர்பஜன் கூறுகையில் : அந்த போட்டியில் அம்பயர்கள் எல்லாம் அவர்களின் செயல் வேலையை செய்யாமல் ரிக்கி பாண்டிங் அம்பயர் போல் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியர்கள் களத்தில் என்ன நடக்கிறதோ அதை அங்கேயே வைத்திருக்காமல் அதனை தாண்டி வெளியேயும் கொண்டுவந்தனர். நானும் சைமண்ட்ஸ்சும் அருகருகே இருந்தும் எங்களுக்கு அருகில் சச்சின் ஒருவர் மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் அந்த சம்பவத்தின் போது எங்கள் அருகில் யாரும் இல்லை.

Harbhajan 3

ஆனால் விசாரணையின் போது மேத்யூ ஹெய்டன், கில்க்ரிஸ்ட், கிளார்க், பாண்டிங் ஆகியோர் நாங்கள் இருவரும் பேசியது எங்களுக்கு தெளிவாக கேட்டது என்று கூறினார்கள் .அவர்கள் யாருமே அந்த இடத்தில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. எனது அருகே சச்சின் மட்டுமே நாங்கள் பேசியதைக் கேட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் குறைவான வாய்ப்புதான்.

Harbhajan 1

எனக்கும் சைமண்ட்ஸ்க்கும் இடையே என்ன சண்டை நடந்தது என்று தெரியாமல் ஆஸ்திரேலிய மீடியாக்களில் என்னை அவர்கள் தாக்கி பேசினார்கள். மேலும் எங்கு சென்றாலும் கேமராவுடன் என்னை துரத்தினார்கள் அந்த தொடர் எனது வாழ்வில் நடந்த மிக மோசமான தொடர் என்று ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement