- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs SRH : இப்படி விளையாடினால் மட்டுமே சென்னையில் சி.எஸ்.கே அணியை வீழ்த்த முடியும் – ஹர்பஜன் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஹர்பஜன் கூறியதாவது : எப்போதும் சென்னை மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒன்றாகும். உடல்நிலை காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் என்னால் விளையாடா முடியவில்லை. அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி மேலும், அணி வெற்றியடைந்தது அதனினும் மகிழ்ச்சி. நாங்கள் போட்டியை 19 ஓவரிலே முடிக்க நினைத்தோம். ஆனால், கடைசியில் கொஞ்சம் நமது இதயத்தினை நம் வீரர்கள் சோதித்து பார்த்தனர்.

வாட்சன் சிறப்பாக ஆடினார். சென்ற ஆண்டு இறுதிப்போட்டியில் அவர் தனியாக நின்று ஆடியது போல நேற்றைய போட்டியிலும் ஆடினார். சென்னை அணியின் ரசிகர்கள் இந்த மைதானத்தில் அளித்த ஆதரவு சொல்லி தெரிய தேவையில்லை. அந்த அளவிற்கு அற்புதம் சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த அவர்கள் எங்களை விட பல மடங்கு பலத்துடன் விளையாடினால் மட்டுமே எங்களை வீழ்த்த முடியும் அந்த அளவிற்கு இங்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் என்று ஹர்பஜன் கூறினார்.

- Advertisement -
Published by