இவரிடம் வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம், இவர் இந்திய அணிக்கு கிடைத்த வைரம் – இந்திய வீரரை புகழ்ந்த ஹர்பஜன்

Harbhajan-singh
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

toss

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சார்பில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணிக்கு பும்ரா போன்ற மேட்ச் வின்னர் கிடைத்தது மகிழ்ச்சியான விடயமாகும். ஹாட்ரிக் என்பது ஒரு வீரர் உடைய அடையாளமாக மாறாது அவர் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் 9 ஓவர்களில் எடுத்துள்ளார். இதைப்பற்றி நாம் பெருமையாக பேசுவதற்கு வார்த்தைகள் பத்தாது.

Bumrah-1

மேலும் அவரிடம் இருந்து வேறு எதையும் நாம் இனி கேட்கவும் கூடாது. அவர் நமக்கு கிடைத்த வைரம் என்று கூறினார். மேலும் ஒருநாள் போட்டி என வந்தாலும் சரி, டெஸ்ட் போட்டி என வந்தாலும் சரி இந்திய அணிக்காக பும்ரா தனது முழு திறனையும் கொடுத்து இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவரை பாராட்டி கூறினார். ஹர்பஜன் மற்றும் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement