முக்கிய வீரர் இன்றி துபாய்க்கு பறந்த சி.எஸ்.கே அணி. அவர் துபாய் செல்ல இன்னும் 2 வாரம் ஆகுமாம் – விவரம் இதோ

2018csk
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மொத்தமுள்ள 60 போட்டிகளும் இங்கு உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தான் நடக்கிறது.
இந்த மூன்று மைதானங்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை இதற்காக கடந்த ஒரு வாரமாக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை வைத்து தங்களது சொந்த மைதானத்தில் பயிற்சியைச் செய்து வந்தனர்.

Dubai

- Advertisement -

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கடந்த ஒரு வாரமாக பயிற்சி செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நான்கு நாட்கள் பயிற்சியில் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு மற்றும் உள்ளூர் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில் ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த மூவரும் 19ஆம் தேதி அணியில் இணைந்து கொள்வார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரும் இணைந்து இணைந்து விட்டார்கள்.

இன்று மொத்த அணியும் துபாய்க்கு விமானம் மூலம் புறப்பட்டு விட்டார்கள் அதனை சி.எஸ்.கே நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதில் சென்னை அணியில் இருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் செல்கின்றனர். ஆனால் ஹர்பஜன்சிங் மட்டும் இரண்டு வாரம் கழித்துதான் துபாய் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Harbhajan

ஏனெனில் ஹர்பஜன் சிங்கின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ள இரண்டு வாரங்கள் அவர் இந்தியாவில் இருப்பார். அதன் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து துபாய் செல்வார் ஹர்பஜன் சிங். ஏற்கனவே மாற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிலர் கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement