- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனக்கு தானே தடுமாறும் கேப்டன் இந்தியாவுக்கு தேவையில்ல.. இதை செய்ங்க.. ரோஹித்துக்கு ஹர்பஜன் அட்வைஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது.

அந்த தோல்விக்கு சுமாரான பேட்டிங் மற்றும் பவுலிங் முக்கிய காரணமானது. குறிப்பாக ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது தோல்விக்கு காரணமானது. மேலும் கடந்த 5 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் சுமாரான ஃபார்மில் இருப்பதால் பேசாமல் பும்ரா கேப்டனாக செயல்படலாம் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

ஹர்பஜன் அதிருப்தி:

இந்நிலையில் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காததே ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பிலும் எதிரொலிப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இப்படி சுமாரான ஃபார்மில் இருக்கும் கேப்டன் இந்தியாவுக்கு தேவையில்லை என்றும் ஹர்பஜன் விமர்சித்துள்ளார். எனவே ரோஹித் விரைவில் ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ரோகித் போன்ற பெரிய பிளேயர் ரன்கள் குவிக்கவில்லை என்றால் அது உங்களுக்கு கொஞ்சம் கவலையை கொடுக்கும். இந்தியாவுக்காக நிறைய ரன்கள் குவிக்கும் திறமையை ரோகித் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தப் போட்டியிலும் கடந்த தொடரிலும் அவர் ரன்கள் குவிக்கவில்லை. அப்படி ரன்கள் குவிக்காத போது பேட்ஸ்மேனாக உங்கள் மீது அழுத்தம் உண்டாகும்”

- Advertisement -

ஃபார்முக்கு வாங்க:

“இப்படி ரன்கள் குவிக்காததால் தன் மீதே அழுத்தத்தை கொண்டிருக்கும் கேப்டன் இந்தியாவை வழி நடத்துவதை நாம் விரும்ப மாட்டோம். அது அவருடைய கேப்டன்ஷிப்பையும் பாதிக்கும். விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்பவார் என்று நம்புவோம். அடுத்த போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் ரோஹித் சர்மாவுக்கு பொருந்தும். எனவே இந்தப் போட்டியை மறந்து விட்டு அடுத்து வரும் போட்டிகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும்”

இதையும் படிங்க: இதை செய்யலன்னா.. பேசாம ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு வர வேணாம்ன்னு சொல்லுங்க.. பசித் அலி காட்டம்

“ஏனெனில் அவர் ஃபார்முக்கு திரும்புவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று” என்று கூறினார். இந்த நிலையில் 2வது போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடியதால் ரோஹித் சர்மா தடுமாறினார். அதனால் 3வது போட்டியில் அவர் மீண்டும் தன்னுடைய பழைய ஓப்பனிங் இடத்தில் விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -