ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே பெர்த் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அசத்தனும் :
அதோடு இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தினை பிடித்துள்ளது. இந்த தொடரில் எஞ்சியுள்ள நான்கு ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றால் இந்திய அணி நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
இந்நிலையில் இந்திய அணி அடுத்து சந்திக்க இருக்கும் சவால் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : பெர்த் டெஸ்ட் போட்டியில் அடைந்த வெற்றி இந்திய அணிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.
ஏனெனில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அவர்களது கோட்டையான பெர்த் மைதானத்திலேயே வீழ்த்தியது என்பது அசத்தலான ஒரு நிகழ்வு. எனவே நிச்சயம் இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கை நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உத்வேகத்தை கொடுக்கும்.
அப்படி இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதிப் போட்டிக்கு செல்வது மட்டும் முக்கியம் கிடையாது. அங்கு சென்று சாம்பியன் பட்டத்தையும் இந்திய அணி வெல்ல வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து.
இதையும் படிங்க : இதை மட்டும் பண்ணுங்க விக்கெட் விழும்னு பும்ரா என்கிட்ட வந்து சொன்னாரு – முகமது சிராஜ் பகிர்வு
மேலும் ஆஸ்திரேலியா அணியை அவர்களது கோட்டையான பெர்த் மைதானத்திலேயே அடித்தது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கும். இந்த நம்பிக்கையை அப்படியே கொண்டு சென்று இந்திய அணி இந்து தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றும் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



