மீண்டும் தமிழில் ட்வீட் …தமிழ்க்கு பெருமை சேர்த்த சென்னை வீரர் !

jadeja

நாளை புனேவில் நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கின்றது சென்னை சூப்பர்கிங்ஸ்.நாளை புனேவில் நடைபெறவுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியை காண சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் ரசிகர்கள் கிளம்பிசென்று உள்ளனர்.
Harbhajan1

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி சென்னையில் நடைபெற்றபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாதென்று அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

அதையும் தாண்டி போட்டி நடைபெற்றபோது நாம்தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மைதானத்தில் செருப்பு வீசினர்.இதனால் சென்னையில் நடக்கவிருக்கும் அடுத்தடுத்த 7 போட்டிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்துமே புனேவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி நாளை சென்னையில் நடைபெறவிருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி புனே மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்நிலையில் புனேவில் நடைபெறவுள்ள போட்டியை காண சிறப்பு ரயிலில் பயணம் செய்துள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்களை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன்சிங் டிவீட் செய்துள்ளார்.தற்போது அந்த டிவீட் சமூக வலைத்தளத்தில் சென்னை ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement