யார்கிட்ட உன் திமிர காற்ற , எங்ககிட்டயேவா…பெங்களூருக்கு பதிலடி கொடுத்த சென்னை வீரர் !

bhajii
- Advertisement -

ஐபிள் தொடரில் 2 ஆண்டுகள் தடை முடிந்து இந்த சீசனில் களமிறங்கி உள்ள சென்னை அணியில் புதிதாக இரண்டு சூழல் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் என்பதை விட சென்னை அணிக்கு கிடைத்த புதிய தமிழ் புலவர்கள் என்று தான் கூற வேண்டும்.அந்த இரு பந்து வீச்சாளர்கள் வேறு யாரும் இல்லை ஹர்பஜன், மற்றும் இம்ரான் தாஹிர் தான். கடந்த ஐபிள் சீசன்களில் வேவ்வேறு சில அணிகளில் ஆடிக்கொண்டிருந்த இந்த இரு வீரர்களும் இந்த ஆண்டு சென்னை அணியில் ஏலம் எடுக்கபட்டனர்.

kohli

- Advertisement -

இந்த ஐபிள் தொடங்கிய ஆரம்பத்தின் முன்பே இவர்கள் இவர்கள் இருவரும் மாறி மாறி ட்விட்டரில் தமிழில் பதிவிட்டு தமிழ் ரசிகர்களை அசத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஹர்பஜன் சிங் ஐபிள் போட்டிகள் தொடங்கும் முன்னரே தான் தமிழ் கற்று வருவதாக ட்வீட் ஒன்றில் தெரிவித்தார். ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ரசிகர்கள் பின்னர் ஹர்பஜன் பதிவிட்டு வந்த தமிழ் ட்வீட்களை பார்த்து ஆடி போகினார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருக்கு இடையேயான போட்டியில் அபார வெற்றி பெற்ற சென்னை அணியின் வெற்றியை குறிக்கும் வகையிலும். நேற்று சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அம்பத்தி ராயுடு மற்றும் தோணியை குறிப்பிட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பிதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் வாடிவாசல் திறந்தவங்க கிட்ட மோதுவதா.

யாருடைய திமிலை யார் அடக்க பார்ப்பது! நாங்கள் மூச்சி விடும் சத்தமே இங்கு உறுமல் தான் என்றும் . மேலும் ஆந்திர வீரரான அம்பதிக்கு தெலுங்கிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . இந்த டீவீட்களை ஹர்பஜனின் அட்மின் தான் போட்டு வருகிறார் என்றாலும் அவரது பார்வைக்கு செல்லாமல் இது போன்ற ட்வீட்களை போட முடியாது. இதனால் ஹர்பஜனின் தமிழ் ஆர்வத்தை கண்டு பல தமிழ் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement