அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் காயமடைந்த சுப்மன் கில் அதன்பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட்டார். பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் அவர் மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
சுப்மன் கில்லின் இயல்பான ஆட்டம் இது கிடையாது : இர்பான் பதான்
அந்த வகையில் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டிய அவர் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்த முதலாவது டி20 போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 2 பந்துகளை மட்டும் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி அவர் 4 ரன்களோடு ஆட்டம் இழந்து வெளியேறிய விதம்தான் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சன் துவக்க வீரருக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கும் வேளையில் அவர் இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதால் அவரை நீக்கிவிட்டு சாம்சனை சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில் முதல் போட்டியில் ஆட்டமிழ்ந்த விதம் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் கூறுகையில் : உண்மையிலேயே சுப்மன் கில்லின் ரோல் எனக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏனெனில் வழக்கமாக சுப்மன் கில் போட்டியின் ஆரம்பத்தில் இதுபோன்று அதிரடியாக விளையாட மாட்டார்.
முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர் அடுத்த பந்திலும் ஏறி வந்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதுபோன்று அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இறங்கி வந்து விளையாடி ஆட்டமிழந்து நான் பார்த்தது கிடையாது. டி20 போட்டிகளில் வீரர்களுக்கிடையே நிறைய போட்டி இருப்பதனால் அவர் அபிஷேக் ஷர்மா மாதிரியோ அல்லது சஞ்சு சாம்சன் மாதிரியோ அதிரடியாக விளையாடிய முயற்சி செய்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : கேப்டனாக அவர் ஓகே தான்.. ஆனா பேட்ஸ்மேனா கஷ்டப்படுறார் – சூரியகுமார் யாதவின் மோசமான நிலை
ஆனால் இது அவருடைய ஆட்டம் கிடையாது. டி20 போட்டியில் கூட அவர் தனது சரியான டைமிங் மூலம் சிறப்பான ஷாட்டுகளை விளையாடி ரன் சேர்க்கக் கூடியவர். ஆனால் தற்போது அணிக்குள் போட்டி நிலவுவதால் அதிரடியாக ஆட நினைத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதுதான் அவர் செய்யும் தவறு என இர்பான் பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.



