இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது டிசம்பர் 9-ஆம் தேதியான நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மோசமான பார்மில் சிக்கி தவிக்கும் சூரியகுமார் யாதவ் :
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் வெற்றிபெற்று வரும் வேளையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரையும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
ஆனால் தனிப்பட்ட முறையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் கேப்டனாக அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்தடுத்து கோப்பைகளை வென்று வந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து சொதப்பி வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் கேப்டனான பிறகு அவரது பேட்டிங் பார்ம் மிகவும் மோசமான நிலையை தற்போது சந்தித்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு மட்டும் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
கடைசியாக ஆசிய கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் அடித்த அவர் அதற்கு பிறகு இதுவரை பெரியளவில் ரன் குவிக்காததால் அவரது கேப்டன்சி சிறப்பாக இருந்தும் அவரது பேட்டிங் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அவரது இந்த பேட்டிங் சரிவு பலரது மத்தியிலும் பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா மட்டும் இதை பண்ணலனா இந்தியா இவ்ளோ ஈஸியா ஜெயிச்சிருக்காது – ஹர்பஜன் சிங் கருத்து
இருந்தாலும் நிச்சயம் சூரியகுமார் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒரு சில நல்ல இன்னிங்ஸ்ஸை விளையாடினாலே மீண்டும் பார்முக்கு திரும்பி விடுவார்கள் என்கிற ஆதரவும் அவருக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



