இந்தியாவில் நடைபெற இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இப்போதைக்கு நடத்தப்படாது என்றும் இந்தத் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில் : அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்படுகின்றன என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கும் தோனி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் பயிற்சியில் ஈடுபட்ட டோனி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது. நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியின் ஆட்டத்தை காண காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை தந்துள்ளது. அதுமட்டுமின்றி தோனி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து விலகியிருந்தாலும் அவரை சுற்றிய இந்திய கிரிக்கெட் செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. மேலும் ஏற்கனவே பல முன்னாள் வீரர்களும் அணியில் இடம்பெற மாட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தோனியின் இடம் குறித்து தற்போது ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : தோனியை எப்படி காண்பீர்கள் ? நீங்கள் அவரது ஐபிஎல் திறனை பார்க்கிறீர்களா அல்லது அவருக்கு மரியாதை அளிக்கிறீர்களா ? அவர் மிகச்சிறந்த வீரர் அதுமட்டுமின்றி கேப்டன்களிலும் மிகச்சிறப்பான ஒருவர் என்ற உண்மையை கருத்தில் கொள்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இந்திய கிரிக்கெட் நிறைய செய்திருக்கிறார் மேலும் டோனி ஒரு பெரிய வீரர் அவர் திறமையானவரா ? இல்லையா ? என்பதை சொல்லத் தேவையில்லை எனவே இதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. உங்களுக்கு தோனி தேவை என்று நினைத்தால் அவரும் கிடைத்தால் அவரை நீங்கள் தேர்ந்து எடுங்கள் என்று ஹர்பஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தற்போது உள்ள தோனி ஏற்கனவே அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாலும் கடந்த 6 மாதங்களுக்கு மேல் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை இதனாலும் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதில் மிகவும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



