- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில் மற்றும் பண்ட் ஆகியோருக்கு காத்திருக்கும் சவால்.. இங்கிலாந்து தொடருக்கு முன் எச்சரித்த – ஹர்பஜன் சிங்

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இழந்தது. அதற்கடுத்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்து தொடர் மிகவும் சவாலானது : ஹர்பஜன் சிங்

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு சவாலான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு உண்மையிலேயே மிகவும் சவால் வாய்ந்த தொடர் தான் என்றும் இந்த தொடரில் விளையாட இருக்கும் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் எதிர்கொள்ள இருக்கும் முக்கிய விடயங்கள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது உண்மையிலேயே சவாலான ஒன்று. சுப்மன் கில் தற்போது இளம் வீரர்களைக் கொண்ட அணியின் கேப்டனாக இருக்கிறார். எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத அணியை அவர் கையாள இருப்பது உண்மையிலேயே மிகவும் சவாலானது.

- Advertisement -

ஏனெனில் இந்த அணியில் அனுபவ வீரர்கள் இல்லாததால் இந்த தொடர் அவ்வளவு எளிதான தொடராக இருக்காது. எனவே இந்த தொடர் அவர்களுக்கு மிகவும் கடினமான தொடராக இருக்கும். அதேவேளையில் இந்திய அணியில் நிறைய திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் தான் காபா டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற மிக முக்கிய காரணமாக இருந்தனர்.

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஐ.சி.சி எப்போது ஹால் ஆஃப் பேம் விருது குடுக்கும்? – ரூல்ஸ் சொல்வது என்ன?

எனவே அவர்களை இங்கிலாந்து சூழலிலும் சிறப்பாக விளையாடும் திறன் உடையவர்கள் என்றே நான் பார்க்கிறேன். ஆனாலும் அனுபவம் இல்லாதது சற்று பின்னடைவை தரலாம் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -