10000 ரன்ஸ் அடிக்கலன்னா அவமானப்படுங்கன்னு சொன்னேன்.. 2011இல் ஃபீல் செய்த விராட் கோலி பற்றி ஹர்பஜன்

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவர் 80 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

முன்னதாக 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற விராட் கோலி சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் குறுகிய காலத்திலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். ஆனால் 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2014 வரை தொடர்ச்சியாக அசத்தாமல் சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

10000 ரன்கள்:

குறிப்பாக தம்முடைய அறிமுகத் தொடரிலேயே அவர் 4, 15, 0, 27, 30 என வெறும் 76 ரன்களை மட்டுமே எடுத்தார். அப்போது தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்று சந்தேகத்துடன் விராட் கோலி இருந்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அப்போது உங்களிடம் உள்ள திறமைக்கு 10,000 ரன்கள் அடிக்கவில்லை என்றால் அது உங்களது தவறு மற்றும் அவமானம் என்று சொன்னதாக ஹர்பஜன் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் வெஸ்ட் இண்டீஸில் இருந்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை ஷார்ட் பந்துகளை வீசி ஃபிடல் எட்வர்ட்ஸ் அதிகமாக தொல்லை செய்தார். அவரிடம் விராட் கோலி மீண்டும் மீண்டும் அவுட்டானதால் ஏமாற்றமடைந்தார். மேலும் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு போதுமானவராக உள்ளோமா? என்ற சந்தேகம் அவரிடம் இருந்தது”

- Advertisement -

திறமையான விராட் கோலி:

“அப்போது அவரிடம் “10000 ரன்கள் அடிக்காவிட்டால் உங்களுக்கு நீங்களே அவமானப் படுங்கள். உங்களிடம் அந்த திறமை இருக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை செய்யாவிட்டால் அது உங்களுடைய தவறு” என்று சொன்னேன். அதன் பின் விராட் கோலி வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே விதி விலக்கு” என்று கூறினார். அவர் கூறுவது போல 2014க்குப்பின் அசத்தலாக செயல்பட்டு வரும் விராட் கோலி இதுவரை 8848 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணிக்கெதிராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் பங்களாதேஷ் – பாகிஸ்தானுக்கு என்ன ஆச்சு?

அத்துடன் 35 வயதாகும் அவர் இன்னும் 1152 ரன்களை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் குவித்து சாதனை படைப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அந்த வகையில் சுமாராகத் துவங்கினாலும் அனுபவத்தால் முன்னேறியுள்ள விராட் கோலி தன்னை சேம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்துள்ளார். அடுத்ததாக அவர் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.

Advertisement