பாகிஸ்தான் அணிக்கெதிராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் பங்களாதேஷ் – பாகிஸ்தானுக்கு என்ன ஆச்சு?

PAK-vs-BAN
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி பாகிஸ்தான அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

வரலாறு படைக்க காத்திருக்கும் வங்கதேச அணி :

இதன் மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் வங்கதேச அணியானது முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அதே ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 274 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வங்கதேச அணி 262 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 172 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது வங்கதேச அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இதுவரை வங்கதேச அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்துள்ளதால் இந்த போட்டியின் கடைசி நாளான இன்று வங்கதேச அணியின் வெற்றிக்கு பிரமாதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றால் மாபெரும் வரலாற்றுச் சாதனையை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிகழ்த்த காத்திருக்கிறது.

இதையும் படிங்க : கிரிஸ் கெயிலின் மாபெரும் வரலாற்று சாதனையை உடைத்த நிக்கோலஸ் பூரான் – எந்த சாதனை தெரியுமா?

அந்த சாதனை யாதனில் : இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்காமல் இருந்த வங்கதே அணி கடந்த போட்டியில் தான் வெற்றி பெற்றிருந்தது. அதோடு இந்த போட்டியையும் வங்கதேச அணி கைப்பற்றினால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனையை நிகழ்த்தும் பொன்னான வாய்ப்பு அவர்களது கைகளில் காத்திருக்கிறது.

Advertisement