அவருக்கு லாலிபாப் கொடுக்குறீங்களா? முக்கிய வீரருக்காக தேர்வுக் குழுவை விளாசிய ஹர்பஜன்

Harbhajan Singh 3
- Advertisement -

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதற்கு 3 விதமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர்கள் டெஸ்ட் அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்பி வரும் சூரியகுமார் யாதவ் கழற்றி விடப்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட உள்ளார். அத்துடன் ரிங்கு சிங் தமிழக வீரர் சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்கள் ஒருநாள் தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகிய சீனியர் வீரர்களும் நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் தொடரில் தேர்வாகி கம்பேக் கொடுக்க உள்ளனர்.

- Advertisement -

ஹர்பஜன் சிங் விளாசல்:
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ள நட்சத்திர ஸ்பின்னர் சஹால் டி20 அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் கழற்றி விட்ட சஹாலை தற்போது 2024 உலகக் கோப்பிலும் கழற்றி விடுவதற்கு தேர்வு குழு முயற்சிப்பதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“டி20 அணியில் சஹால் இல்லை. குறிப்பாக ஒருநாள் அணியில் அவரை தேர்வு செய்துள்ள நீங்கள் டி20 அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் (தேர்வுக்குழு) சஹாலுக்கு வாயில் லாலிபாப் கொடுத்துள்ளார்கள். அதாவது நீங்கள் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட்டில் உங்களை நாங்கள் தேர்வு செய்ய மாட்டோம். பெயருக்காக மற்றொரு தொடரில் தேர்ந்தெடுப்போம் என்பது போல் அவர்களின் முடிவு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

- Advertisement -

“அதே போல பேட்ஸ்மேன்களுக்கு சவாலான தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே போன்றவர்களும் தேர்வு செய்யப்படவில்லை. இளம் வீரர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுப்பது நல்லது. ஆனால் ரகானே, புஜாரா அல்லது உமேஷ் யாதவ் ஆகியோரிடம் தேர்வு குழுவினர் பேசியிருக்க வேண்டும். ஏனெனில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உமேஷ் யாதவ் சிறப்பாக விளையாடினார்”

இதையும் படிங்க: இனி அவரு வேணாம்.. விராட் கோலிக்கு கட்டம் கட்டிய பி.சி.சி.ஐ – ரோஹித் சர்மாவுடன் நடைபெற்ற அவசர மீட்டிங்

“இருப்பினும் தற்போது கழற்றி விடப்பட்டுள்ள இந்த 3 பேரும் மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமாகும். ஆனால் இந்தியாவுக்காக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர்களிடம் பிசிசிஐ பேச வேண்டும். குறிப்பாக ஏன் தேர்வு செய்யப்படவில்லை வருங்காலங்களில் வாய்ப்பு இருக்கிறதா என்பதை பற்றி அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement