- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6, 6, 6, 6.. இதுக்கு தான் பயப்படுறீங்களா? குருட்டுத்தனமாக பேசிய பாகிஸ்தான் நிரூபருக்கு ஹர்பஜன் பதிலடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே தொடர்ச்சியாக வெற்றி பெற தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு பாகிஸ்தான் அதள பாதாளத்தில் திண்டாடி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் நடைபெற்ற 203 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அவமான தோல்வியை பதிவு செய்தது.

அதை விட 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்ற பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது. ஆனால் இந்த அவமானத்தையும் தாண்டி கொஞ்சமும் தயக்கமில்லாமல் 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுடன் சமூக வலைதளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மோதி வருகின்றனர்.

- Advertisement -

ஹர்பஜன் பதிலடி:
அந்த வரிசையில் “2023 உலகக் கோப்பையில் பாபர் அசாமிடம் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பேட்டி எடுக்க பிச்சை எடுத்த தருணம்” என்ற தலைப்புடன் ஒரு பாகிஸ்தான் ரசிகர் ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த வீடியோவில் எந்த இடத்திலுமே இர்பான் பதான் தெரியவில்லை. ஆனாலும் அந்த பாகிஸ்தான் ரசிகர் சுகத்தை அனுபவிப்பதற்காக அப்படி ஒரு தலைப்பை தமக்கு தாமே போட்டுக்கொண்டடார்.

அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அந்த ரசிகருக்கு கொடுத்த பதிலடி பின்வருமாறு. “இந்த வீடியோவில் இர்பான் பதான் எங்கே இருக்கிறார்? பாகிஸ்தான் மக்களுக்கு எப்படி பேசுவது என்ற நாகரிகம் தெரியாது. தற்போது நீங்கள் குருடர்களாகவும் ஆகிவிட்டீர்களா? இந்த நேரத்தில் ஆங்கிலத்தில் நீங்கள் கேள்வியை கேட்டால் பிரச்சனையை சந்திப்பீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.

- Advertisement -

அதே போல பரீத் கான் எனும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஹர்பஜன் சிங்கிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஷாஹித் அப்ரிடி 6, 6, 6, 6 என தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதை “ஹாய் ஹர்பஜன் சிங். இதனால் தான் உங்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறீர்களா?” என்ற தலைப்புடன் ஹர்பஜனை டேக் செய்து வம்பிழுத்தார்.

இதையும் படிங்க: 5 வருடம் கழித்து சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பளித்த ரோஹித் பேட்டி.. முதல் ஒன்டே இந்திய பிளேயிங் லெவன் இதோ

அதற்கு 2008ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி சன் பத்திரிகையில் வெளியான அட்டை படத்தை காண்பித்து ஹர்பஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் கூறியுள்ளது பின்வருமாறு. “இதற்காக அல்ல. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்த போட்டோவை பாருங்கள். இதுதான் உண்மையான காரணம்” என்று பதிலடி கொடுத்துள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் வேலையில்லாத பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏன் பதிலளித்து நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று ஹர்பஜனிடம் கூறி வருகிறார்கள்.

- Advertisement -