- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2 நாளில் கொல்கத்தாவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மூச்சுக்கு மோசமான நிலை வந்துருச்சு.. ஹர்பஜன், வாகன் சாடல்

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. கொல்கத்தாவில் நவம்பர் 14ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இந்திய அணியும் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்த கொல்கத்தா பிட்ச்சில் போராடி 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29, ரிசப் பண்ட் 27, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

மோசமான பிட்ச்:

அடுத்ததாக 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் தென்னாப்பிரிக்கா 2வது நாள் முடிவில் 93/7 என தடுமாறி வருகிறது. இன்னும் 3 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள அந்த அணி 63 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் களத்தில் கேப்டன் பவுமா 29* ரன்களுடன் போராடி வருகிறார்.

எனவே தென்னாப்பிரிக்காவை 120 ரன்கள் முன்னிலைக்குள் ஆல் அவுட்டாக்கும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2வது நாளின் முடிவிலேயே கொல்கத்தா டெஸ்ட் போட்டி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் அழிந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிப்பதற்காகவே சாம்பியன்ஷிப் கோப்பை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ஹர்பஜன் சாடல்:

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கொல்கத்தாவின் பிட்ச் டெஸ்ட் கிரிக்கெட்டை மூச்சு விட முடியாத அளவுக்கு கொல்வதாக ஹர்பஜன் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “2வது நாள் முடிவதற்கு முன்பே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு கேலியான விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் இறக்கிறது” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 200 ரன்ஸ் அடிச்சாலும் எங்கப்பா சந்தோசப்பட மாட்டாரு.. டீமை விட எனக்கு அது முக்கியமல்ல.. சூர்யவன்சி பேட்டி

அதே போல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன். “இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கொல்கத்தா பிட்ச் மோசமானதாக இருக்கிறது” என்று ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் கூறுவது போல ஒரு டெஸ்ட் போட்டி 2 – 3 நாட்களுக்குள் முடிந்தால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள். 2 – 3 தரமான போட்டியும் வெளிப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -