200 ரன்ஸ் அடிச்சாலும் எங்கப்பா சந்தோசப்பட மாட்டாரு.. டீமை விட எனக்கு அது முக்கியமல்ல.. சூர்யவன்சி பேட்டி

Vaibhav Suryavanshi
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் இந்தியா ஏ அணி அமீரகத்தை 148 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு 32 பந்துகளில் சதத்தை அடித்த வைபவ் சூரியவன்சி 11 பௌண்டரி 15 சிக்ஸருடன் 144 (42) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருது வென்றார்.

அத்துடன் ஒரு தேசிய அணிக்காக இளம் (14) வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். சமீப காலங்களாகவே களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் சூரியவன்சி அடித்து நொறுக்கி அதிரடியாக விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தைப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே இவருக்கு 14 வயது தானா? என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

200 ரன்ஸ் அடிச்சாலும்:

இந்நிலையில் தம்முடைய தந்தை ஒரு போட்டியில் 200 ரன்கள் அடித்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டார் என்று சூரியவன்சி தெரிவித்துள்ளார். இருப்பினும் தம்முடைய அம்மா டக் அவுட்டானாலும் பாராட்டுவார் என்று கூறும் அவர் எப்போதும் சொன்ன சாதனைக்காக விளையாடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அணிக்காக பெரிய ரன்கள் குவித்தால் சாதனைகள் தாமாக வரும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“என்னுடைய தந்தை எப்போதும் எனது செயல்திறனால் திருப்தியடைந்தது கிடையாது. ஒருவேளை 200 ரன்கள் அடித்தால் கூட, உன்னால் இன்னும் 10 ரன்கள் அடித்திருக்க முடியும் என்று அப்பா என்னிடம் சொல்வார். ஆனால் என்னுடைய அம்மா நான் சதத்தை அடித்தாலும் அல்லது டக் அவுட்டானாலும் தொடர்ந்து இப்படியே விளையாடு என்று சொல்வார்”

- Advertisement -

சாதனைகள் முக்கியமல்ல:

“பொதுவாகவே எதையும் நான் மிகுதியாக செய்ய முயற்சிப்பது கிடையாது. சிறுவயதில் இருந்து நான் பயிற்சி எடுத்த விஷயங்கள் மற்றும் போட்ட கடின உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அதையே தற்போது மைதானத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஒருவேளை நான் எதையாவது வித்தியாசமாக முயற்சித்தால் அது என்னுடைய என்னுடைய ஆட்டத்தின் அங்கமாக இருக்காது”

இதையும் படிங்க: கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பு.. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கேப்டன் கில் – என்ன நடந்தது?

“அது எனக்கும் என்னுடைய அணிக்கும் உதவியும் செய்யாது. களத்தில் நான் இன்னும் கொஞ்ச நேரம் விளையாட்டினால் கூடுதலாக 20 அல்லது 30 ரன்கள் அடிப்பேன். அதை செய்யும் போது தாமாகவே எனக்கு சாதனைகள் உருவாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணி தங்களது அடுத்தப் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தான் ஏ அணியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement