என்ன நடந்தாலும் பாகிஸ்தானுக்கு மட்டும் இந்திய அணியை அனுப்ப கூடாது. ஏன் தெரியுமா? – ஹர்பஜன் சிங் விளக்கம்

Harbhajan
- Advertisement -

அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 கிரிக்கெட்டின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர் தற்போது மீண்டும் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக சுமூகமான உறவு இல்லை.

- Advertisement -

அதன்காரணமாக 2008-ஆம் ஆண்டு முதல் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து விட்டது. அதன் காரணமாக அடுத்த ஆண்டு அங்கு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி செல்லாது என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் ஐசிசி இடம் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் பெரிய இழப்பு ஏற்படும் என்பதனால் ஐசிசி தற்போது என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி என்ன நடந்தாலும் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி எதற்காக பாகிஸ்தான் செல்ல வேண்டும்? அங்கு நிறைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. அங்கு ஏதேனும் ஒரு அசம்பாவிதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : 2024 கர்நாடக டி20 தொடரின் ஏலத்தில் வாங்கப்பட்ட ராகுல் டிராவிட் மகன் சமித்.. தொகை, அணி விவரம்

அங்கே செல்வது நமது வீரர்களுக்கு பாதுகாப்பானது அல்ல. நமது வீரர்களின் உயிர் தான் மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். இந்திய அணியை நிச்சயம் பிசிசிஐ அங்கு அனுப்பாது என்று உறுதியாக நம்புகிறேன். நமது வீரர்களின் பாதுகாப்பு தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement