ரோஹித்துக்கு பதில் யார் கேப்டன்? ஐ.சி.சி எழுப்பிய கேள்வி – நேரடியான பதிலை அளித்த ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் தற்போது இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணியனாது பயிற்சி போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டதால் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த 5 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்திய அணியின் நிர்வாகமானது மாயங்க் அகர்வாலை மாற்று வீரராக அணியில் இணைத்துள்ளது. அதனால் நிச்சயம் ரோகித் சர்மா இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதில் புதிய கேப்டன் இந்த போட்டிக்காக செயல்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக இந்த இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ள வேளையில் தற்போது சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக களம் இறங்கப் போவது யார்? அணியை வழிநடத்த போவது யார்? என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த போட்டி துவங்க உள்ள வேளையில் இந்திய அணியை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுவதாகவும் அவர்கள் இருவரில் ஒருவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் பல தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஆனாலும் இந்திய அணியின் புதிய கேப்டன் குறித்த விவரத்தை இன்னும் பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ தகவலாக வெளியிடவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தங்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஒருவேளை இந்த முக்கியமான இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ரோகித் சர்மா தவறவிட்டால் அணியை தலைமை தாங்கி வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வியை எழுப்பி இருந்தது.

- Advertisement -

அதற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் : ஜஸ்பிரித் பும்ரா தான் என்று அவருடைய பெயரை பதிந்து நேரடியாக தனது பதிலை ஐசிசிக்கு ரிப்ளையாக அளித்துள்ளார். அண்மையில் இந்திய அணியின் துணை கேப்டன் பதவியை ஏற்ற பும்ரா வருங்காலத்தில் இந்திய அணியை வழி நடத்துவார் என்பதனாலும் ரிஷப் பண்டின் கேப்டன்சி அவ்வளவாக திருப்திகரமாக அமையவில்லை என்பதனாலும் பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமாவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு பின் 2 புதிய கிரிக்கெட் தொடர்கள் அறிவிப்பு – வெளியான அட்டவணை இதோ

அதேபோன்று வருங்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தப்போகும் ஒரு வீரராகவும் பும்ரா பார்க்கப்படுவதால் கட்டாயம் அவரே இந்த டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 3 வகையான கிரிக்கெட்டிலும் முன்னணி வீரராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement