உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்களுக்குள் நுழைந்துள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் 12 அணிகள் ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ள வேளையில் எட்டு அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ஹர்பஜன் சிங் தேர்வுசெய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
அந்த வகையில் இந்த சூப்பர் 8 சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவில் தலா நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. இப்படி இந்த 2 பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். அதனால் இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டமானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகளில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்களது முதலாவதாக ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து பிப்ரவரி 22-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை பல்வேறு முன்னாள் வீரர்களும் கணித்து வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்து வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : அவரை பத்தி எனக்கு கவலை இல்ல.. எதிர்ல ஆடப்போறவங்கள நெனச்சா தான் கவலையா இருக்கு – கேப்டன் நச் பதில்
1) அபிஷேக் சர்மா, 2) இஷான் கிஷன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) அக்சர் பட்டேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.



