இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப்போகும் சென்னை அணியின் ஜாம்பவான் வீரர் – விவரம் இதோ

Harbhajan
- Advertisement -

கடந்த 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வருபவர் சுழற்ப்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக அசாருதீன் காலத்தில் அறிமுகமானவர் தற்போது வரை ஓய்வு பெறாமல் ஆடிக் கொண்டிருக்கிறார் . இந்திய அணிக்காக ஆடி 5 வருடங்கள் ஆகியும் தற்போது வரை உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் அசத்தி வருகிறார்.

Harbhajan

- Advertisement -

கடந்த 2016ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய டி20 அணிக்காக ஆடியவர், 2015 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் கடைசியாக ஆடினார் . அதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 468 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . 2018 ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஆடியவர்.

Harbhajan

அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கி ஆடிக் கொண்டிருக்கிறார் தற்போது. 38 வயதாகும் அவர் வயதின் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisement