ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு ரிஷப் பண்ட்க்கு பதில் அவர் தான் இந்தியாவுக்கு சரியான கீப்பர்.. ஹர்பஜன் பேட்டி

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் துவங்கும் அந்த தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் ரிசப் பண்ட் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் பெரியளவில் அசத்தியதில்லை.

அதே சமயம் 2024 டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக அவர் இந்திய அணியின் வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக விளையாடுவது சரியாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். ஏனெனில் சாம்சன் சமீபத்திய தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சதத்தை அடித்து நல்ல பார்மில் இருப்பதாக ஹர்பஜன் கூறியுள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் தேர்வு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் தென்னாப்பிரிக்காவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டும் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடினார்”

“ஆனால் அது மிகவும் நீண்ட சுற்றுப்பயணம். எனவே அவருக்கு ஓய்வு கொடுப்பது பெரிய விஷயமாக இருக்காது” என்று கூறினார். அவர் கூறுவது போல புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 27 போட்டிகளில் ரிஷப் பண்ட் 33.50 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். ஆனால் சாம்சன் 16 போட்டிகளில் 56.66 என்ற நல்ல சராசரியில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

அக்சர் படேல் தேர்வு:

அதே போல ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நான் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேலை தேர்ந்தெடுத்துள்ளேன். ஜடேஜா நீண்ட வருடங்களாக செய்து வந்த வேலையை அவரால் நிரப்ப முடியும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவை தாண்டி அக்சர் படேலுக்கு துணை கேப்டன் பதவி வழங்க இதுவே காரணம் – விவரம் இதோ

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் நோக்கத்தில் அந்தத் தொடர் நடைபெற உள்ளது. எனவே அந்த தொடரில் யார் விளையாடுவார்கள் என்பதை வைத்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் வீரர்களை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement