ஹார்டிக் பாண்டியாவை தாண்டி அக்சர் படேலுக்கு துணை கேப்டன் பதவி வழங்க இதுவே காரணம் – விவரம் இதோ

Axar-and-Pandya
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட என்ன காரணம் :

இந்த இந்திய அணியில் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பிள்ளது. ஏனெனில் டி20 வகையான வடிவத்தில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற வேளையில் அவருக்கு அடுத்ததாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அவ்வேளையில் புதிய கேப்பனாக சூரியகுமார் யாதவும், துணை கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அடுத்த டி20 உலக கோப்பை வரை சூரியகுமார் யாதவ் தான் கேப்டன் என்பது உறுதியானது. அதே வேளையில் பாண்டியா அவருக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் யாதெனில் :

- Advertisement -

பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது கடினமான சூழ்நிலையை சந்தித்து வருவதாலும், பணிச்சுமையை காரணம் காட்டி அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகுவதாலும், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் பாண்டியாவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக தேர்வுசெய்யப்பட காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால், பண்ட், கில் ஆகிய 3 பேரும் இங்கிலாந்து டி20 அணியில் இடம்பெறாததுக்கு – காரணம் இதுதான்

அக்சர் படேல் எப்பொழுதுமே தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட கூடியவர் என்பதும் அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஜடேஜா போன்று மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்பதனாலே இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாண்டியாவிற்கு இப்படி துணை கேப்டன் பதவி மறுக்கப்பட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது சரிதான் என்றும் சிலர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement