- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனது சிறந்த லெவன் அணியை வெளியிட்ட ஹர்பஜன் சிங் தோனிக்கு இடமில்லை கோலிக்கும் இடமில்லை – விவரம் இதோ

ஒரு காலத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்பட்டவர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி உள்ளார்.

சமீபத்தில் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்.
தற்போது டி20 லீக் தொடர் மற்றும் வர்ணனை செய்வது என அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனது தலை சிறந்த அணியை வெளியிட்டுள்ளார் ஹர்பஜன்சிங். இதில் தற்கால ஜாம்பவான்களான தோனிக்கும் , விராட் கோலிக்கும் இடமில்லை என்பதே ஆச்சரியமான விஷயம்.துவக்க வீரர்களாக சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

அவர் அடுத்தது ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆல்-ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஆகியோரை தேர்வு செய்து ஆச்சரியமிக்க தனது தேர்வினை செய்து இருக்கிறார்.

- Advertisement -

அதனைத் தாண்டி கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அவரை எல்லாம் மறந்துவிட்டு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை கேப்டனாக போட்டுள்ளார்.

சேவாக், ஹெய்டன், திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலீஸ், ரிக்கி பாண்டிங் (கேட்பன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஷான் போலக், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா. இந்த லெவலை தேர்வு செய்த அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தனது அணியினை தேர்வு செய்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் அவரது காலத்தில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by