ஆல்டைம் பெஸ்ட் லெவன் டெஸ்ட் அணி. இந்திய வீரர்கள் 3 பேர்தான் – ஹர்பஜன் தேர்வு செய்த அணி இதோ

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் ஹர்பஜன்சிங் தனக்கு பிடித்த வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். இதில் அனைத்து நாடுகளிலிருந்தும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து மிகச் சிறந்த அணியை வெளியிட்டுள்ளார் அவர்.அவரது அணியில் துவக்க வீரராக வலது இடது என விரேந்தர் சேவாக் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இருவருமே துவக்கம் முதலே அதிரடியாக ஆடுவதில் வல்லவர்கள். மூன்றாவது இடத்திற்கு இந்தியாவின் தடுப்பு சுவர் என்று பெயர் பெற்ற ராகுல் டிராவிட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஹர்பஜன் சிங் .நான்காவது இடத்திற்கு கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், 5வது இடத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கையும் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணிக்கு கேப்டனாக ரிக்கி பாண்டிங் இருப்பார் என்றும் கூறியுள்ளார். ஆல்-ரவுண்டராக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்த ஜாக் காலிஸ்-ஐ தேர்வு செய்துள்ளார். விகெட்கீப்பர் இடத்தை இலங்கையின் குமார் சங்ககாரா ஆக்கிரமிக்கிறார். வேகப்பந்து வீச்சாளராக மூன்று பேரை தேர்வு செய்துள்ளார்.

Dravid 1

தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ,ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார். சுழற்பந்து வீச்சாளராக ஷேன் வார்ன் ஒரே ஒருவரை மட்டுமே தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன்சிங்.இந்த வரலாற்று சிறப்புமிக்க அணியில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகிய மூவரை மட்டுமே தேர்வு செய்துள்ளார்.

sachin6

ஹர்பஜன்சிங் மேலும் நான்கு ஆஸ்திரேலிய வீரர்களை தெரிவு செய்துள்ளார். இவர்கள் அனைவருமே ஹர்பஜன்சிங் ஆடிய காலகட்டத்தில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த தேர்வு குறித்து தற்போது கலவையான விமர்சனங்கள் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement