உங்க தரத்தை நிரூபிச்சு காட்டுவதே இதுக்கெல்லாம் ஒரே கம்பேக் வழி.. ரோஹித், கோலி பற்றி ஹர்பஜன்

Harbhjan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். ஏனெனில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதற்கு அவர்களுடைய சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைத்தது.

அதனால் அவர்கள் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறலாம் என்று சில இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையை விராட் கோலி, ரோஹித் சர்மா அடுத்து வரும் போட்டிகளில் பெரிய ரன்கள் குவித்து தங்களுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இல்லையெனில் தேர்வாளர்களால் நீக்கப்படும் அளவுக்கு தான் தற்போது அவர்கள் இருப்பதாக ஹர்பஜன் கூறியுள்ளார்.

- Advertisement -

நிரூபிச்சு காட்டுங்க:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா இந்த தலைமுறையின் கிரேட் பிளேயர். விராட் கோலியும் இந்த தலைமுறையின் அற்புதமான பிளேயர். ஆனால் அது வருங்காலத்தை தீர்மானிக்காது. அவர்களுடைய ஃபார்ம் மற்றும் தேர்வாளர்கள் தான் வருங்காலத்தை தீர்மானிக்க முடியும். அவர்கள் ரன்கள் குவிக்காத போது மக்கள் விமர்சனமாக தவறாக பேச துவங்குவார்கள்”

“ஆனால் நீங்கள் ரன்கள் குவித்து அவர்களை தவறு என்று நிரூபிக்க முடியும். தற்போது அது மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழி. ஒருவேளை அவர்கள் தொடர்ந்து விளையாட விரும்பினால் பெரிய ரன்கள் அடித்து கம்பேக் கொடுக்க வேண்டும். நாம் இந்திய அணிக்காக விளையாட பொருத்தமானவர்களா என்பதை தீர்மானிப்பது வீரர்களை பொறுத்தது”

- Advertisement -

ஹர்பஜன் அட்வைஸ்:

“அவர்களால் மட்டுமே தங்களுடைய நிலை என்ன என்பதை பற்றி சிந்திக்க முடியும். இங்கே ரோஹித் சர்மா, விராட் கோலியை பற்றி மட்டும் பேசவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக விளையாட விரும்பினால் நன்றாக விளையாட வேண்டும் என்பது உங்களுடைய செயல்முறையாக இருக்க வேண்டும். உங்களைத் தேர்ந்தெடுப்பது தேர்வாளர்கள் கையில் இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: திட்டங்களை லீக் பண்ணாரு.. ஆஸி மாதிரி திணிச்சாரு.. கிரேக் சேப்பல் மோசமான கோச்சிங் பற்றி உத்தப்பா

இதை அடுத்து இந்திய அணியின் அடுத்ததாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அப்படியே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த இரண்டு தொடர்களிலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபியில் பெரிய ரன்கள் அடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தால் அவர்கள் இழந்த மதிப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement